×

ஒசூரில் பசுமை விமான நிலையம்: ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

 

சென்னை: ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைக்க ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமான நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு. ஆலோசகர்களின் ஆலோசனையின் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளது.

Tags : Green Airport ,Hosur ,Tamil Nadu government ,Chennai ,Hosur, Krishnagiri district ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு