×

வேளாங்கண்ணி அருகே தண்ணீர் தேங்கியுள்ள வயல்களில் இரைதேடி குவிந்த கொக்கு கூட்டம்

நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி அருகே வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பறவைகள் சுதந்திரமாக வயல்களில் அமர்ந்து இரை தேடும் காட்சியை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பறவைகள் வருகை தந்துள்ளது.
குறிப்பாக உள்நாட்டு பறவைகளான கொக்கு, மடையான், நாரை வகைகள், குருவி, குயில்கள் ஆகியவை விவசாய விளை நிலங்கள் நீர்நிலைகள் மற்றும் வயல்வெளிகளில் சுதந்திரமாக சுற்றி வருகின்றது.

இதை சாதகமாக பயன்படுத்தி கொக்கு, மடையான், நாரை போன்ற பறவைகளை வளை விரித்தும், கன்னி வைத்து சிலர் பிடித்து வேட்டையாடி விற்பனை செய்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கிராமப்புறங்களில் உள்ள மரங்களில் குயில் போன்ற பறவைகளும் வேட்டையாடப்பட்டு வருகிறது. வனவிலங்கு சட்டப்படி பறவைகளை பிடிப்பதோ வேட்டையாடுவதோ கடுமையான குற்ற செயல் ஆகும்.

கொக்கு, மடையான் ஜோடி ரூ.200 லிருந்து ரூ.300க்கும், குயில் ஜோடி ரூ.500க்கும் படுஜோராக விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்கி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் சமையல் செய்து மதுபிரியர்களுக்கு சைடிசாக கொடுக்கின்றனர். எனவே வனத்துறையினர் பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

Tags : Velankanni ,Nagapattinam ,
× RELATED இறுதி சடங்கு செலவுக்கு பணம்...