- ஸ்பெயின்
- டேவிஸ் கோப்பை
- போலோக்னா
- டேவிஸ் கோப்பை டென்னிஸ்
- மார்செல் கிரானோலர்ஸ்
- பெட்ரோ மார்டினெஸ்
- ஜெர்மனி
- கெவின் கிராவிட்ஸ்
- டிம் பீட்ஸ்
பொலோக்னா: டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் ஸ்பெயினை சேர்ந்த மார்செல் கிரானோலர்ஸ், பெட்ரோ மார்டினஸ் இணை, ஜெர்மனி வீரர்கள் கெவின் கிராவிட்ஸ், டிம் பியட்ஸ் இணையுடன் மோதியது.
இதில் சிறப்பாக செயல்பட்ட ஸ்பெயின் வீரர்கள், 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர். இதையடுத்து, புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெற்ற ஸ்பெயின் அணி, டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கடந்த 2019ம் ஆண்டுக்கு பின் முதன் முறையாக அந்த அணி இறுதிப் போட்டிக்குள் மீண்டும் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
