×

பார்வையற்றோருக்கான டி-20 உலக கோப்பை கிரிக்கெட் வெற்றிபெற்ற இந்திய வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: பார்வையற்றோருக்கான டி-20 உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட்
வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: ‘‘துணிவு வழிநடத்தும்போது வரலாறு உருவாகிறது.

முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற சிறப்பான நமது மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நீங்கள் இந்தியாவின் பெருமையாகவும், உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் உயர்ந்து நிற்கிறீர்கள்’’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,women ,T20 World Cup for ,Blind ,Chennai ,M.K. Stalin ,women's ,T20 World Cup ,
× RELATED பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை...