×

இளைஞர்கள் கோரிக்கை லாலாபேட்டை அருகே குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை

கரூர், ஜன. 6: லாலாப்பேட்டை அருகே குடும்பத்தகராறு காரணமாக பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரம் பகுதியை சேர்ந்தவர் காந்தி. இவரின் மனைவி அன்புரோஜா(32). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3ம்தேதி அன்று அன்புரோஜா, கூலி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், வீட்டில் யாருமில்லாத சமயத்தில் அன்புரோஜா,தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,Lalapet ,
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...