×

விவசாயிகள் கோரிக்கை தனியார்மயமாக்கலை கண்டித்து புதுகையில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, டிச.31: புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசின் தனியார்மயமாக்கல் முயற்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு அனைத்துத் துறைகளையும் தனியார்மயமாக்கும் முயற்சியை கண்டித்து சிஐடியூ சார்பில் புதுக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ மாவட்டத் தலைவர் முகமதுஅலிஜின்னா தலைமை வகித்தார். மத்திய அரசு அனைத்துத் துறைகளையும் தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். ஏழைகள், அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்களுக்கு கொரோனா ஊரடங்கு காலம் முடியும் வரை மாதத்திற்கு ரூ.7,500 வழங்க வேண்டும். அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு, உழைக்கும் மக்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

Tags : protest ,CITU ,
× RELATED போக்குவரத்து பணியாளர்கள் 18ம் தேதி ஆர்ப்பாட்டம்