×

போக்குவரத்து பணியாளர்கள் 18ம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: போக்குவரத்து துறையில் உள்ள 20 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி வரும் 18ம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது. இதுகுறித்து, அதன் பொதுச்செயலாளர் டி.வி.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், போக்குவரத்து துறையில் உள்ள 20 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை தாக்குபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை முன்வைத்து வரும் 18ம் தேதி மாலை 3 மணியளவில் சென்னையை தவிர்த்து விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, நெல்லை, புதுக்கோட்டையில் உள்ள போக்குவரத்து தலைமை கழகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம். மேலும், இந்த கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post போக்குவரத்து பணியாளர்கள் 18ம் தேதி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Transport workers ,Chennai ,Tamil Nadu Government Transport Corporation Employees' Association ,general secretary ,T.V. Padmanaban ,Transport workers protest on 18th ,Dinakaran ,
× RELATED சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்