×

கட்டிமேடு அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

 

திருத்துறைப்பூண்டி, ஜூன் 12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மு.ச.பாலு தலைமை வகித்து பேசுகையில், சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் விதமாக மரம் நடுதல், நீர் சேமிப்பு, பிளாஸ்டிக் அகற்றுதல் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தல், மின்சார சிக்கனம் போன்ற தலைப்புகளில் விழிப்புணர்வு இந்த வாரம் முழுவதும் ஏற்படுத்தப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அப்துல் முனாப் முன்னிலை வகித்தார். எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி இதில் நான் பெருமை அடைகிறேன் என் பள்ளியை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும் பொறுப்பும் என்பதை உணர்ந்து செயல்படுவேன்.

பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் குப்பைகளை ஏற்படுத்த மாட்டேன் மேலும் எனது சக தோழர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்றும் பள்ளியின் தூய்மை பணிக்கு என்னை மனப்பூர்வமாக அர்ப்பணித்துக் கொள்வேன் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி முயற்சியில் நான் முழு மனதுடன் பங்கேற்பதுடன் எனது நண்பர்கள் உறவினர்கள் சுற்றத்தார் அனைவரிடமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் என்னால் இப்பணிக்காக மேற்கொள்ளப்படும்,

ஒவ்வொரு நடவடிக்கையும் எனது பள்ளியை தூய்மையாக வைத்திட பேருதவி செய்யும் என்பதில் உறுதியாகவுள்ளேன்.மேலும் எனது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன் என்று மாணவர்தனராஜ் உறுதி மொழியை வாசிக்க அனைத்து மாணவ, மாணவிகளும் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ரகு செய்திருந்தார்.

The post கட்டிமேடு அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Day ,Katimedu Government School ,Thiruthurapoondi ,Katimedu Government Higher Secondary School ,Tiruvarur ,Headmaster ,M.C. Balu ,Environment Day ,
× RELATED திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேஷன் சிறந்த காவல் நிலையமாக தேர்வு