×

கும்பகோணத்தில் மின்கம்பியில் உரசி மயில் உயிரிழப்பு

 

கும்பகோணம், ஜூன் 12: கும்பகோணத்தில் மின் கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து பெண் மயில் உயிரிழந்தது. கும்பகோணத்தில் மேலக்காவேரியில் உள்ள யானையடி பகுதியில் நேற்று ஒரு பெண் மயில் தாழ்வாக பறந்து வந்தது. அப்போது அங்கிருந்த மின் கம்பியின் மீது எதிர்பாராத விதமாக உரசியதில், மின்சாரம் அந்த மயில் மீது பாய்ந்துள்ளது.

இதில் மயில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. இதனைப்பார்த்த அப்பகுதியினர் உடனே கும்பகோணம் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் வன தற்காலிக பணியாளர் ரவி சம்பவ இடத்திற்கு வந்து இறந்த பெண் மயிலின் உடலை கைப்பற்றி கும்பகோணம் கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு சென்றனர்.

The post கும்பகோணத்தில் மின்கம்பியில் உரசி மயில் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Yanayadi ,Melakaveri ,
× RELATED கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் விளம்பர பதாகைகள் அகற்றம்