×

உபி சொகுசு பஸ்சில் தீ: பயணிகள் உயிர் தப்பினர்

லக்னோ: உபி மாநிலம் ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் டெல்லியில் இருந்து தனியார் சொகுசு பஸ் ஒன்று கோண்டியாவுக்கு நேற்று அதிகாலை சென்றது. லக்னோவின் ரேவ்ரி சுங்க சாவடியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் வந்த போது சொகுசு பஸ்சில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து, போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று பஸ்சில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பஸ்சில் ஏற்பட்ட தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. பஸ் டிரைவர் ஜகத் சிங் கூறுகையில், ‘‘தொழில்நுட்ப பிரச்னையினால் பின் சக்கரத்தில் தீப்பிடித்தது. பின்னர் தீ பஸ் முழுவதும் பரவியது’’ என்றார். பயணிகள் தங்கள் ஊருக்கு செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.சொகுசு பஸ்சில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : UP ,Lucknow ,Delhi ,Gondia ,Agra-Lucknow Expressway ,Rewari ,Lucknow.… ,
× RELATED புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு...