×

மடிப்பாக்கத்தில் வீடு வாடைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்த ஆந்திர புரோக்கர் கைது

 

சென்னை: மடிப்பாக்கம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்த ஆந்திரா புரோக்கரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெருநகர காவல் எல்லையில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் நபர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு விபாச்சார தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி விபச்சார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் யாஸ்மின் தலைமையிலான குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பலர் வந்து செல்வதாக குடியிருப்பு வாசிகள் சார்பில் புகார் வந்தது. அதன்படி விபச்சார தடுப்பு பிரிவு- 2 இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் நேற்று மடிப்பாக்கம் சதாசிவம் நகர் 2வது தெருவில் உள்ள குடியிருப்பில் உள்ள வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில், ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த லத்தீப்(31) என்பவர் இளம் பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. பின்னர் லத்தீப்பை படித்து விசாரணை நடத்திய போது, லத்தீப் ஏற்கனவே பல்வேறு பாலியல் புரோக்கர்களிடம் உதவியாளராக பணியாற்றியதும், பணம் சம்பாதிக்கும் ஆசையில் தனியாக பாலியல் தொழில் தொடங்கியது தெரியவந்தது. அதைதொடர்ந்து, லத்தீப்பை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இளம் பெண் ஒருவர் மீட்கப்பட்டார்.

Tags : AP ,BROKER ,Chennai ,Andhra Brokar ,Madipakkam ,Chennai Metropolitan Police ,
× RELATED கேள்வி கேட்டதால் ஆத்திரம்; திமுக...