- தீபாவளி
- உ.பி.
- லக்னோ
- ஃபதேஹபாத்
- ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ்வே
- உத்திரப்பிரதேசம்
- ஸ்ரீசைன் மற்றும் டாடர் நிறுவனம்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா -லக்னோ விரைவு சாலையில் பதேஹாபாத் சுங்கச் சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியை ஸ்ரீசைன் மற்றும் டாடர் நிறுவனம் நிர்வகித்து வருகின்றது. இங்குள்ள 21 தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையாக ரூ.1100 மட்டுமே வழங்கப்பட்டதால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வாகனங்களை கட்டணமின்றி செல்வதற்கு அனுமதித்தனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டணமின்றி சுங்கச்சாவடியை கடந்து சென்றதால் மற்ற சுங்கச்சாவடிகளில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். எனினும் அங்கிருந்த ஊழியர்கள் இதனை தடுத்ததால் காவல்துறையினர் விரைந்தனர். இதனை தொடர்ந்து சுங்கச்சாவடியை நிர்வகிக்கும் நிறுவன அதிகாரிகள், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 10 சதவீத சம்பள உயர்வு அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினார்கள்.
