×

திருச்சி சிறையில் கைதிகள் மோதல்

திருச்சி: திருவாரூரை சேர்ந்த சக்கரை (எ) லோகநாதன், தஞ்சாவூரை சேர்ந்த தன்று (எ) தாரணி, திருச்சியை சேர்ந்த விஷ்ணு மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த நாகராஜ், கரூரை சேர்ந்த முருகானந்தம் ஆகிய 5 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களுடன் இவர்களது நண்பர்களான திண்டுக்கல்லை சேர்ந்த பிரசன்னகுமார், மதுரையை சேர்ந்த காமேஷ் பிரபு ஆகியோரும் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் பிரசன்னகுமார் மற்றும் காமேஷ் பிரபு ஆகியோர் திருச்சி சிறையில் இருந்து திடீரென மாற்றப்பட்டனர். இதற்கு முருகானந்தம் தான் காரணம் என 4 பேரும் நேற்றுமுன்தினம் 14வது பிரிவு சிறை அருகே வைத்து முருகானந்தத்தை இரும்பு கம்பியால் தாக்கினர். இந்த சம்பவம் குறித்து லோகநாதன், தாரணி, விஷ்ணு, நாகராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Trichy jail ,Trichy ,Sakkarai (A) Loganathan ,Thiruvarur ,Thandu (A) Dharani ,Thanjavur ,Vishnu ,Nagaraj ,Dindigul ,Muruganandam ,Karur ,Trichy Central Jail ,
× RELATED கேள்வி கேட்டதால் ஆத்திரம்; திமுக...