×

அடுத்த கூட்டத்தொடரில் சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும்: பேரவையில் சிந்தனை செல்வன் வலியுறுத்தல்

சென்னை:  2025-26ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கையின் மீது நடந்த விவாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏல சிந்தனை செல்வன் (காட்டுமன்னார்கோவில்) பேசியதாவது: சாதி ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு ஒரு சிறப்புச் சட்டம் தேவை என்கிற ஒரு உரையாடல் இங்கே முன்வைக்கப்பட்டது. ஏற்கனவே இருக்கின்ற இந்திய தண்டனைச் சட்டம், இப்போது அதை அவர்கள் மாற்றியிருக்கிறார்கள்.

அந்த தண்டனைச் சட்டத்தின் மூலமாகவே இந்த குற்றங்களைக் கையாள முடியும் என்கிற ஒரு பார்வையும் இருக்கிறது. ஆனால், தடுப்பு மற்றும் இழப்பீடு என்கிற இந்த இரண்டு புள்ளிகளுக்கு நாம் அவற்றை கருத்தில் கொண்டு ஒரு சிறப்புச் சட்டம் தேவைப்படுகிறது. ஆகவே, அடுத்து வருகின்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரிலே இந்த சட்டத்தை கொண்டுவருவதற்கு தமிழக அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Chinthana Selvan ,Chennai ,Viduthalai Siruthaigal Party ,MLA ,Kattumannarkovil ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு