×

நயினாருடன் சந்திப்பு பாஜவில் காளியம்மாள்?

நெல்லை: நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள், அக்கட்சியில் இருந்து விலகிய பின்னர், தவெகவில் இணைவதாக பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. ஆனால் காளியம்மாள் இதை மறுத்தார். தொடர்ந்து அவர் பாஜவில் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்நிலையில் நெல்லையில் அவர் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்ததாக கூறப்படுகிறது. பின்னர், நேற்று காளியம்மாள் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று சுவாமி கும்பிட்டார்.

தொடர்ந்து காளியம்மாள் அளித்த பேட்டி: அரசியல் கட்சித் தலைவர் ஒருவரைச் சந்தித்ததாகக் கூறப்படுவது மாதிரியான கேள்விகளை எல்லாம் என்னிடம் கேட்கவே வேண்டாம். நிச்சயமாக ஏதாவது ஒரு அரசியல் கட்சியோடுதான் தேர்தல் நேரப் பயணம் இருக்கும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லுவேன். எந்தக் கட்சி என்பதையும் பிறகு சொல்லுவேன். இன்னும் சொல்லப்போனால், மக்கள் சார்ந்த பிரச்னைகளுக்காகத்தான் நாம் அதிகாரத்தில் இருக்கக் கூடியவர்களைப் போய் அணுக வேண்டியிருக்கிறது. நாம் யாரையாவது பார்த்தால் கூட, மக்கள் பிரச்னைக்காகத்தான் சந்திப்போமே தவிர, தனிப்பட்ட ரீதியில் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார். காளியம்மாளுடன் சந்திப்பு குறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனும் மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kaliammal ,BJP ,Nainar ,Nellai ,Naam Tamilar Party ,Thaweka ,
× RELATED பெருந்துறையில் விஜய் இன்று பிரசாரம்:...