×

பாக்.கிற்கு ஏவுகணை வழங்கும் அமெரிக்கா பிரதமர் மோடி அரசின் ராஜதந்திர பின்னடைவு: காங். சாடல்

 

புதுடெல்லி: அமெரிக்காவின் சமீபத்திய ஏவுகணை ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் இணைந்துள்ளது. அமெரிக்காவிடம் இருந்து மேம்பட்ட நடுத்தர தூர ஏவுகணைகளை பாகிஸ்தான் பெறும் என்று அமெரிக்க போர் துறை அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘2025ம் ஆண்டு மே 7ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி ரேதியோன் தயாரித்த மேம்படுத்த நடுத்தர தூர வான் ஏவுகணைகள் வழங்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெறவில்லை.

ஆனால் இப்போது கத்தார், ஓமன், சவுதி அரேபியா, இஸ்ரேல், துருக்கி மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பெயர்கள் பட்டியிலிடப்பட்டுள்ளது. ராஜதந்திர காலநிலை எவ்வளவு விரைவாக மாறுகிறது. பிரதமர் மோடி அரசுக்கு எதிரான ராஜதந்திர பின்னடைவுகள் குவிகின்றன என்று தெரிவித்துள்ளார்.

 

 

Tags : US ,Pak ,PM Modi government ,Congress ,New Delhi ,Pakistan ,US Department of War ,General Secretary ,Jairam Ramesh ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...