×

இந்தியாவுடன் போர் மூண்டால் சவுதி அரேபியா தலையிடுமா? பாகிஸ்தான் அமைச்சர் பதில்

புதுடெல்லி: சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சவுதி அல்லது பாகிஸ்தானை தாக்கினால் இருநாடுகளையும் தாக்கியதாக கருதப்படும் என்ற ரீதியில் ஒப்பந்தம் அமைந்தது.  இதுபற்றி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், ‘இந்தியா அல்லது வேறு எந்த நாடும் பாகிஸ்தானை தாக்கினால் சவுதி அரேபியா இதில் தலையிடும்.

அதில் நிச்சயமாக எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் இது குறிப்பாக எந்த நாட்டையும் பற்றியது அல்ல, ஏனெனில் இது ஒரு கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம். ஆக்கிரமிப்புக்கு பயன்படுத்தப்படக்கூடாது. அதே சமயம் சவுதி அரேபியா அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு இருந்தால், நாங்கள் கூட்டாக அதை எதிர்த்துப் பாதுகாப்போம்’ என்றார்.

Tags : Saudi Arabia ,India ,Pakistan ,New Delhi ,Saudi ,Riyadh ,Defense Minister ,Khawaja Asif ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...