×

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.83 ஆக சரிந்து வரலாறு காணாத வீழ்ச்சி!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரே நாளில் 41 காசுகள் சரிந்து டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு ரூ.90.83 ஆக சரிந்து சற்று மீண்டது. டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு தற்போது 26 காசுகள் சரிந்து ரூ.90.68 ஆக உள்ளது.

இந்திய ரூபாய் வரலாறு காணாத அளவுக்கு சரிவைச் சந்திக்க இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் முக்கியப் பங்கை வகிக்கிறது. நடப்பாண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எண்ணெய் இறக்குமதி செய்வதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அங்கிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதன் மூலம், போருக்கு இந்தியா உதவி வருகிறது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரே நாளில் 41 காசுகள் சரிந்து டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு ரூ.90.83 ஆக சரிந்து சற்று மீண்டது. வெளிவர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருவதன் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை கண்டது. டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு தற்போது 26 காசுகள் சரிந்து ரூ.90.68 ஆக உள்ளது.

Tags : MUMBAI ,
× RELATED 2014, 2019, 2024 தேர்தல்களில் முக்கிய...