காட்டுமன்னார்கோவில், செப். 18: காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் கண்ணன்(41). இவர் போர்வெல் போடும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி திவ்யபாரதி(30). இவர்களுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். திவ்யபாரதி அருகே உள்ள ரைஸ் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. ரைஸ் மில்லுக்கு வேலைக்கு போக வேண்டாம் என கண்ணன் கூறி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தினந்தோறும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த திவ்யபாரதி, வீட்டில் சமையல் எண்ணெய்யை கொதிக்க வைத்து, தூங்கி கொண்டிருந்த கண்ணனின் இரண்டு கால் முட்டிக்கு கீழே ஊற்றி உள்ளார். கண்ணனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கண்ணன் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம், உதவி ஆய்வாளர் சையத் அப்சல் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து திவ்யபாரதியை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
