×

அன்புமணி பதவி நீட்டிப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது: பாமக வழக்கறிஞர் கே.பாலு பேட்டி

சென்னை: அன்புமணி பதவி நீட்டிப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது என அன்புமணி தரப்பு பாமக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். பாமக வழக்கறிஞர் கே.பாலு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; மாமல்லபுரத்தில் ஆக.8ல் நடந்த பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. தேர்தல் ஆணையம் அங்கீகாரம் மூலம் அன்புமணி தலைமையில் இயங்குவதே பாமக என்பது உறுதியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் இருந்து அன்புமணிக்கு கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் தெரிவித்தார்.

Tags : Election Commission ,Anbumani ,Bhamaka ,K. ,Balu ,Chennai ,Baloo ,Pamaka ,Advocate ,K. Balu ,Mamallapuram ,
× RELATED முதல்வர் மாற்றம் விவகாரம்; நானும்...