×

கடவூர் அருகே மதுபானங்கள் பதுக்கி விற்றவர் கைது

 

 

கடவூர், செப். 15: கரூர் மாவட்டம் கடவூர் அருகே பாலவிடுதி செம்பியநத்தம் ஊராட்சி நல்லூரான்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (41). இவர் அதே பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே மதுபானம் விற்பனை செய்வதாக பாலவிடுதி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சுரேஷ் தனது வீட்டின் அருகே சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்த 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் சுரேஷை கைது செய்தனர்.

Tags : Kadavur ,Suresh ,Nalluranpatti ,Sempiyanatham ,Palaviduti ,Karur district ,
× RELATED 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி கலெக்டர் தகவல்