×

முடிஞ்சா கொள்கை தலைவர்களை பத்தி 10 நிமிஷம் பேசு… படிச்சுட்டு, நடிச்சு பார்த்துட்டு பேசத்தான் சனிக்கிழமை சந்திப்பு; அரசே நேரம் கொடுத்தாலும் பேச மாட்றீயேப்பா… விஜய்யை சல்லி சல்லியாக நொறுக்கிய சீமான்

கீழக்கரை: படிச்சு, நடிச்சு பார்த்துட்டு பேசத்தான் சனிக்கிழமை மக்களை சந்திக்கிறார். என நடிகர் விஜய்யை, சீமான் விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், தமிழ் தேசிய இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் ‘எது நமக்கான அரசியல்’ என்ற தலைப்பில் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தம்பி(விஜய்). நீ படிச்சிருக்கீல்ல? நான் சிங்கம். சிங்கம் வேட்டையாடத்தான் வெளியே வரும். செத்ததை திங்காதுன்னு சொல்றே? தம்பி… ஆண் சிங்கம் எந்த காலத்துலயும் வேட்டைக்கு போகாது. பெண் சிங்கம்தான் வேட்டையாடும். அது அடிச்சதை, செத்ததை கொண்டு வந்து போடும். அதைத்தான் ஆண் சிங்கம் சாப்பிடும். நீ ஒண்ணும் வேடிக்கை காட்ட வரும் சிங்கம் மாதிரி இல்லை… வேடிக்கை பார்க்க வர்ற சிங்கம் மாதிரி இருக்கே.. உன் கொள்கை தலைவர்கள்னு சிலரை சொல்றே?

காமராஜர், வேலு நாச்சியார் பத்தி சொல்றே. சரி… இவங்க ஒவ்வொருத்தரை பத்தி 10 நிமிஷம் பேசு. பார்ப்போம். நீ பேச அனுமதி கேட்கிறதே 10 நிமிஷம் தான். திருச்சியில் பேச 15 நிமிஷம்தான் கேட்டாப்ல… அரசு கூடுதலாக 5 நிமிஷம் கொடுத்து பேச சொல்லியிருக்கு… இதுல சனிக்கிழமை வேற சந்திக்க வர்றேன்னு சொல்லியிருக்காப்ல? எழுதிக் கொடுத்ததை ஒப்பிக்கணும். நடிச்சு பார்த்துட்டு வேற பேசணும். இல்லையா? அதுக்காகத்தான் சனிக்கிழமை வரை நேரம் ஒதுக்கி சந்திக்கிறார்.

விஜய் கோட்பாட்டை தான் நான் எதிர்க்கிறேன். மற்றபடி நீயும் (விஜய்) நானும் அண்ணன், தம்பி உறவு தான். நமக்குள் ஏதாவது சண்டை போடுகிறோமோ? நான் பெரிய எதிரிகளுடன் மல்லுக்கட்டும் போது நீ வெறும் திரையைப் போட்டு மூடலாம் என்றால் எனக்கு கோபம் வராதா?. நீ ஏம்பா குறுக்கே, குறுக்கே ஓடிக்கிட்டு வர்றே…? யாராவது விஜய் பேசுவதை அமர்ந்து கேட்டு இருக்கிறீர்களா?. ஏய்… ஏய்… ஏய்னு தியேட்டரில் முதல் காட்சியை முன் வரிசையில் அமர்ந்து பார்ப்போரை போல் கூக்குரலிட்டு பேசுகிறார். உனக்கு நண்பா, நம்பி. ஆனால் எனக்கு தம்பி, தங்கை. அவர்களுடைய எதிர்காலத்திற்கு தான் நான் போராடி வருகிறேன்.

அப்போது நீ குறுக்கே வரும்போது தான் எனக்கு கோபம் வருகிறது. எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலை என் முன்னோர் எனக்கு கொடுத்துள்ளனர். ஆனால் நீ எழுதி வைத்துக் கொண்டு இந்த இடத்தில் கையை உயர்த்தணும். இந்த இடத்தில் ஆவேசமாக பேச வேண்டும் என டப்பிங் பேசுவதைப் போல பேசக்கூடாது. விஜய் முகத்தைப் பார்த்து வாக்களிக்க வேண்டும் எனக் கூறும் விஜய், 5 ஆண்டுகளுக்குப் பின் அவரின் முகத்தை கேவலமாக பார்ப்பார்கள் எனத் தெரியவில்லை. என் முகத்தை பார்க்காதீர்கள். எனது கொள்கையை பாருங்கள் என்பவன் நான். என் மதத்தை பார்க்காதீர்கள். அதைத் தாண்டி முன்வைக்கும் மனிதநேயத்தை பாருங்கள். சரி… என் கொள்கை தனின்னு சொல்றே?. என்னப்பா உன் கொள்கை? அதை சொல்லு? திமுக அரசியல் எதிரிங்கிறே? சரி… அப்படின்னா எந்தெந்த அரசியல் பிரச்னையில் எதிரி?

அப்போது அதிமுக உன் எதிரி இல்லையா? ஊழல் கட்சிகளை ஒழிக்க வந்தோம்னு சொல்றே? ஒரு கட்சியை ஒழிக்கணுங்கிறதுதான் கொள்கையா? அந்த கட்சிகளை ஒழிச்சுட்டு என்ன செய்யப் போகிறே? நெருப்பை நெருப்பை வைத்து அணைக்க முடியாது. தண்ணீரை ஊத்தித்தான் அணைக்கணும். இப்பத்தானே வந்திருக்கிறேன்னு சொல்றே? இப்ப எதுக்கு நீ வந்தே? நான் பார்த்துக்கிறேன். தம்பி முதலமைச்சராவது லட்சியமல்ல.. முதலமைச்சராகி என்ன செய்யப் போகிறோம் என்பது முக்கியம். திரைக்கவர்ச்சியை வச்சிட்டு, இங்கே காலம் தள்ள முடியாது. இவ்வாறு கூறினார். விஜய் முகத்தைப் பார்த்து வாக்களிக்க வேண்டும் எனக் கூறும் விஜய், 5 ஆண்டுகளுக்குப் பின் அவரின் முகத்தை கேவலமாக பார்ப்பார்கள் எனத் தெரியவில்லை.

Tags : Seeman ,Vijay ,Keezhakarai ,Keezhakarai, Ramanathapuram district ,Tamil National Islamic Alliance ,
× RELATED கட்சி விரோத செயல்பாடுகளில்...