வடலூர்: கடலூர் மாவட்டத்தில் ‘உரிமையை மீட்க தமிழகத்தைக் காக்க’ அன்புமணி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் பாமகவில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கி உள்ளார். இந்நிலையில் நேற்று வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் வழிபாடு நடத்தினார். பின்பு 20 நிமிடங்களுக்கு மேலாக தியானம் மேற்கொண்டார். சத்திய ஞான சபையை சுற்றி வந்த அன்புமணி வள்ளலாருக்கு நிலம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்களிடம் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.
