×

117வது பிறந்த நாளையொட்டி 15ம் தேதி அண்ணா சிலைக்கு முதல்வர் மாலை அணிவிக்கிறார்: திமுக மாவட்ட செயலாளர் அறிவிப்பு

சென்னை: சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் நே.சிற்றரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: பேரறிஞர் அண்ணாவின் 117வது ஆண்டு பிறந்த நாளான 15ம் தேதி அன்று காலை 9 மணி அளவில் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.இதில் மாநில அமைச்சர்கள், முன்னாள்-இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மகளிர் தொண்டர் அணி, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவர் அணி ஆகிய அனைத்து அணி நிர்வாகிகள் தவறாது கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

Tags : Chief Minister ,Anna ,DMK District ,Chennai ,Chennai West ,District ,DMK ,Ne. Chittarasu ,Perarignar Anna ,Valluvar Kottam, Chennai… ,
× RELATED முதல்வர் மாற்றம் விவகாரம்; நானும்...