×

தார்ப்பாய் போடாமல் மண் ஏற்றிச்சென்ற லாரிகளுக்கு அபராதம்

திருப்போரூர், செப்.13: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய தையூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சார்பில், ஏரியை ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. லாரிகள் மூலம் மண் அகற்றப்பட்டு, பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு, லாரிகள் மூலம் மண் எடுத்துச் செல்லப்படும்போது லாரிகளின் மீது தார்ப்பாய் கொண்டு மூடிய நிலையில் எடுத்துச்செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தார்ப்பாய் போட்டு மூடாமல் திறந்த நிலையில் எடுத்துச் செல்வதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன் உத்தரவின்பேரில், தையூர் கிராம நிர்வாக அலுவலர்கள் மேகநாதன், மோகனசுந்தரம் ஆகியோர் ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து போலீசாருடன் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, தார்ப்பாய் கொண்டு மூடாமல் சென்ற 8 லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு, தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : Thiruporur ,Taiyur ,
× RELATED காஞ்சியில் ரூ.24.64 கோடியில் கட்டப்பட்ட...