×

மின் வாரிய அலுவலகம் முன்பு கொட்டப்படும் கட்டிட கழிவுகள்: அகற்ற கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், மின் வழங்கல் நிலையம், இளநிலை செயற்பொறியாளர் அலுவலகம், மின் கட்டண வசூல் மையம் போன்றவை அமைந்துள்ளது. திருப்போரூர் நகரத்தை ஒட்டி அமைந்துள்ளதால் நகரப்பகுதிகளில் பல்வேறு கட்டிடக் கழிவுகள், குப்பைகள் போன்றவை இந்த மின் வாரிய அலுவலகத்தை ஒட்டி கொட்டப்படுகின்றன.

அலுவலகத்தின் வாயிலில் சிலர் கொட்டகை போட்டும், தற்காலிக கட்டிடம் கட்டியும் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கின்றனர். அதற்கு அடையாளமாக இவ்வாறு குப்பைகள், கட்டிட கழிவுகளை கொட்டி வைத்து நீண்ட நாட்களாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை காட்டுவதற்காக இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது.  இதன் காரணமாக மின் வாரிய அலுவகத்திற்கு வரும் ஊழியர்களின் வாகனங்கள், பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாத சூழ்நிலை உள்ளது.

ஆகவே மின் வாரிய அலுவலகத்தின் முன்பு கொட்டப்படும் கட்டிடக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு இரவு நேரங்களில் கொட்டிச்செல்லும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

 

Tags : Electricity Board ,Thiruporur ,Chengalpattu ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...