×

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: ஓங்கி அடித்த இந்தியா அரையிறுதியில் 3 வீராங்கனைகள்

லிவர்பூல்: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிருக்கான 80 கிலோவுக்கு மேலான பிரிவில் நேரடியாக காலிறுதியில் களமிறங்கிய இந்திய வீராங்கனை நுபுர் ஷியாரன் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஒல்டினோ சோடிம்போவாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் குறைந்தது வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார். இதேபோல் 57 கிலோ பிரிவு காலிறுதியில் 2 முறை ஆசிய சாம்பியனான இந்தியாவின் ஜாஸ்மின் 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் குமோரபோனு மாமஜோனோவாடோ வீழ்த்தி அரையிறுதி முன்னேரி வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார்.

80 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பூஜா ராணி 3-2 என்ற கணக்கில் போலந்தின் எமிலியா கோடெர்ஸ்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் 2 முறை உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன் 0-5 என்ற கணக்கில் (51 கிலோ) துருக்கியின் ககிரோக்லு புஸ் நாசிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். முன்னதாக ஆண்கள் பிரிவில் ஜதுமணி சிங் (48 கிலோ), அபினாஷ் ஜம்வால் (65 கிலோ) ஆகியோர் தங்களது பிரிவில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

Tags : World Boxing Championship ,India ,Liverpool ,Liverpool, England ,Nupur Shiaran ,Uzbekistan ,Oldino Sotimboeva ,
× RELATED கான்வே இரட்டை சதம்: நியூசிலாந்து 575 ரன்கள் குவிப்பு