×

15ம் தேதி 117வது பிறந்த நாள் அண்ணா சிலைக்கு எடப்பாடி மரியாதை

சென்னை: அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பேரறிஞர் அண்ணா 117வது பிறந்த நாளான வருகிற 15ம் தேதி (திங்கள்) காலை 10 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து, தலைமை கழக செயலாளர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர்கள், அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Edappadi Palaniswami ,Anna ,Chennai ,AIADMK ,Perarignar Anna ,General ,Anna Salai, Chennai ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்