×

முசிறி அரசு மருத்துவமனையில் தேசிய சித்த மருத்துவர் தின கொண்டாட்டம்

முசிறி, டிச.17: முசிறி அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் செல்வகுமார் தலைமை வகித்தார். குழந்தைகள் நல மருத்துவர் ராஜா செல்வம், எலும்பு மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சித்த மருத்துவர் சங்கீதா சித்த மருத்துவத்தின் சிறப்புகள், நலன் பற்றி விரிவாக பேசினார். தொடர்ந்து சித்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Tags : Psychiatrist Day Celebration ,Musiri Government Hospital ,
× RELATED சாகுபடியில் 20% கூடுதல் மகசூல் ஈட்ட...