- எடப்பாடி
- சசிகலா
- வி. கே. சசிகலா
- அஇஅதிமுக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- அன்பு செங்கோட்டையன்
- ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்
வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் மூத்த முன்னோடியும், தமிழக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் மீதும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுப்பது ஒரு அறிவார்ந்த செயலாகாது. இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. இது கட்சி நலனுக்கும் உகந்தது அல்ல.
அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மீண்டும் கழக ஆட்சி அமைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். மேலும், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கோடிக்கணக்கான தொண்டர்கள் எண்ணங்களுக்கு நாம் என்ன பதிலளிக்கப் போகிறோம்?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
