×

தேஜ கூட்டணியின் 5 மணி நேர பீகார் பந்த்

பாட்னா: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொண்டார். யாத்திரை தர்பங்காவை வந்து அடைந்த போது நடந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் பிரதமர் மோடியின் தாயார் பற்றி அவதூறாக பேசினார். இது தொடர்பாக ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இதை கண்டித்து தேஜ கூட்டணி பீகாரில் நேற்று 5 மணி நேர பந்த் நடத்தியது. இதனால் தலைநகர் பாட்னாவில் ஓருசில வாகனங்கள் மட்டுமே சாலைகளில் சென்றதை காண முடிந்தது. தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்ததால் பள்ளிகள் மூடப்பட்டன.ஒரு சில வணிக நிறுவனங்கள் மட்டுமே திறந்திருந்தன. சில கடைகள் மூடப்பட்டிருந்தன.

இந்த போராட்டத்தின் போது எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. அவசர தேவைகளுக்காக மருத்துவமனைகள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு சென்றவர்களிடம் அந்த கட்சி தொண்டர்கள் தவறாக நடந்து கொண்டதாக ஆர்ஜேடி, காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், பீகார். தெருக்களில் நடந்து செல்லும் பெண்கள், மாணவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்களை தடுத்துள்ளனர். இது சரியானதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Deja Khattani ,Band ,Patna ,Rahul Gandhi ,Bihar ,Darbhanga ,Modi ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...