- இந்தியா
- டிரம்ப்
- திமுகா
- அணி
- சென்னை
- ஜனாதிபதி
- ஐக்கிய மாநிலங்கள்
- மாணவர் குழு செயலாளர்
- திமுகா மாணவர் குழு
- ராஜீவ் காந்தி
சென்னை: இந்திய மக்கள் எல்லோரும் போராடி, முதல்வர்கள் எல்லாம் கோரிக்கை வைத்து, குறையாத ஜிஎஸ்டி வரி அமெரிக்கா அதிபர் வரி விதித்ததும் இந்தியாவில் குறைகிறது என்று திமுக மாணவர் அணி செயலாளர் கூறியுள்ளார். திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி தனது சமூக வலைத்தளம் பதிவில்,‘ 8 ஆண்டு காலமாய் எதிர்க்கட்சிகள், இந்திய மக்கள் எல்லோரும் போராடி நாட்டின் முதல்வர்கள் எல்லாம் கோரிக்கை வைத்தும் ஜிஎஸ்டி வரி குறையவில்லை. அமெரிக்கா அதிபர் டிரம்ப் வரி விதித்ததும் இந்தியாவில் குறைகிறது என்றால் அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கும் நன்றி சொல்லத்தான் வேண்டும் போல. எது எப்படியோ பாலுக்கான வரியும். சாமானிய மக்களின் சாப்பாட்டுக்கான வரியும் குறைந்திருப்பது மகிழ்ச்சியே,’ என்று கூறப்பட்டுள்ளது.
