×

இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம்

பழநி, செப். 3: பழநி அருகே போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் நடத்தினர். இம்முகாமில் விவசாயத்தின் முக்கியத்துவம், இயற்கை விவசாயம், வீட்டிலேயே எளிதாக இயற்கை உரம் தயாரிக்கும் முறை, நீரியல் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் வேளாண் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து உழவன் செயலி, உழவர் அட்டை, பயிர் காப்பீடு மற்றும் வேளாண் துறையில் விவசாயிகளுக்கு அளிக்கும் மானியங்கள் உள்ளிட்டவை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

Tags : Farming Awareness ,Palani ,Podipatti Panchayat Union Middle School ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்