- அண்ணாமலை
- சோலிங்கர் நரசிம்மர் கோயில்
- சோளிங்கர்
- பாஹியா
- முன்னாள்
- பாஜா
- நிலை
- ஜனாதிபதி
- நரசிம்ம சுவாமி கோயில்
- ராணிப்பேட்டா மாவட்டம்
- சோலிங்கர் லட்சுமி நரசிம்மா சுவாமி
சோளிங்கர்: சோளிங்கர் நரசிம்மர் கோயில் மலையடிவாரத்தில் பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் தியானம் செய்தார். பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று மாலை ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு வந்தார். தொடர்ந்து 406 படிகள் கொண்ட சிறிய மலை யோக ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோயில் சார்பில் வஸ்திரம் அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பின்னர் மலை அடிவாரத்தில் உள்ள உடுப்பி மண்டபத்தில் தங்கி திடீரென தியானம் மேற்கொண்டார். தொடர்ந்து 5 மணிநேரம் தியானத்தில் ஈடுட்டார். கோயிலுக்கு தியானம் செய்வதற்காக வந்துள்ளதாகவும், தன்னை சந்திக்க பாஜ நிர்வாகிகள் யாரும் வரக்கூடாது எனவும் அண்ணாமலை கூறியதாக உள்ளூர் பாஜகவினர் தெரிவித்தனர்.
