×

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்றுமதி கடும் பாதிப்பு; தொழில்துறையை பாதுகாக்க கோரி திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: திருப்பூர் தொழிலாளர்களும் திரண்டனர்

திருப்பூர்: அமெரிக்க அரசின் 50 சதவீதம் வரி விதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் உற்பத்தி செய்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய உற்பத்தி துறை சார்ந்த தொழில்துறைகள் பாதிப்பை சந்தித்துள்ளது. இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தவறிய ஒன்றிய பாஜ அரசின் நடவடிக்கைகளால் திருப்பூர் ஆயத்த பின்னலாடை ஏற்றுமதி துறையில் சுமார் 15,000 கோடி ரூபாய் வரை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள் முடங்கும் அபாயமும், பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பும் ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஒன்றிய அரசு உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என
வலியுறுத்தி திமுக தலைைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி தலைமை வகித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக மேற்கு மண்டலப் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், எம்.பி.க்கள் திருப்பூர் கே.சுப்பராயன், மதுரை வெங்கடேசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்துறையினரும் ஏராளமான தொழிலாளர்களும் பங்கேற்றனர். இதனால் ஏராளமான பின்னலாடை நிறுவனங்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், 16 சதவீதமாக இருந்த வரி, 25 சதவீதமாக மாறி, இதன் பின்னர் 50 சதவீதமாக மாற்றியுள்ளார் டிரம்ப். இதன்மூலம் இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பை உடைத்துள்ளார் என்றார்.

காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு பேசும்போது, பிரதமர் மோடியின் தவறான புரிதல் மற்றும் கொள்கை தான் இந்தியாவின் இந்த நிலைக்கு காரணம். மோடியும், அவரது நண்பர்களும் கொள்ளை அடிக்க இந்த ஆட்சி நடக்கிறது என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் பேசுகையில், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் இந்திய பொருளாதாரம் 90 பில்லியன். இதில் சரி பாதி வரி விதிப்பால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. ‌இது நாட்டின் மீதான தாக்குதல். டிரம்ப் இவ்வளவு ஆணவத்தோடு வரி விதித்திருப்பதற்கு மோடி அரசின் 12 ஆண்டு வெளியுறவு துறையின் தவறான செயல்பாடு தான் காரணம் என்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்திருமாவளவன் பேசுகையில், பிரதமர் மோடி தனது பினாமிகளான அதானி, அம்பானிக்காகத்தான் பொருளாதார கொள்கைகளை தீர்மானிக்கிறார். உலக நாடுகளுக்கு மோடி பயணம் செய்வதே, இவர்கள் இருவருக்காகவும் தான் என்றார்.

டிரம்ப், மோடி முகமூடியுடன்…
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தபெதிகவினர் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் ஒருவரே என சுட்டிக்காட்டும் வகையில் டிரம்ப் மற்றும் மோடி இணைந்த முகமூடிகளை அணிந்திருந்தனர்.

வடமாநில தொழிலாளர்கள்;
திருப்பூரில் பணி புரியும் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர், எங்களையும் காப்பாற்றும் திருப்பூரைக் காப்பாற்று என இந்தியில் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags : US ,Dima ,Tiruppur ,Tamil Nadu ,United States ,US government ,State of the Union ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்