×

லீக்ஸ் கோப்பை கால்பந்து: பைனலில் கோலடிக்காமல் மிஸ் செய்த மெஸ்ஸி

சியாட்டில்: அமெரிக்காவில் நடந்த லீக்ஸ் கோப்பைக்கான கால்பந்து இறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணியை வீழ்த்தி, சியாட்டில் சவுண்டர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

அமெரிக்காவில் மேஜர் லீக் சாக்கர், லிகா எம்எக்ஸ் கிளப்ஸ் கால்பந்து அணிகள் இடையிலான லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்தன. இதன் இறுதிப் போட்டியில், அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணியும், சியாட்டில் சவுண்டர்ஸ் அணியும் மோதின.

போட்டியின் துவக்கம் முதல், சியாட்டில் அணி வீரர்களின் ஆதிக்கமே காணப்பட்டது. அதிரடியாக ஆடிய அந்த அணியின் ஒஸாஸே டி ரொசாரியோ, போட்டி துவங்கி 26வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அசத்தினார். அதைத் தொடர்ந்து, 84வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய சியாட்டில் அணியின் அலெக்ஸ் ரோல்டன் கோலாக்கினார். பின், சியாட்டில் அணியின் பால் ரோத்ராக், 89வது நிமிடத்தில் அணியின் 3வது கோலடித்து அசத்தினார். மாறாக, இன்டர் மியாமி அணி வீரர்களால் கடைசி வரை ஒரு கோல் கூட போட முடியாமல் போனது. அதனால், 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற சியாட்டில் சவுண்டர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Tags : Leagues Cup Football ,Messi ,Seattle ,Seattle Sounders ,Lionel Messi ,Inter Miami ,United States ,Major League Soccer ,Liga MX Clubs Football ,United States… ,
× RELATED வெஸ்ட் இண்டீசுடன் 3வது டெஸ்ட்; கான்வே 150; லாதம் சதம்