×

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: செல்வபெருந்தகை கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்திருப்பது முற்றிலும் ஏற்க முடியாதது. சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவது மக்களின் வாழ்வை மேலும் சிரமப்படுத்துவதாகும். மக்கள் செலுத்திய கட்டணத்திற்கே உரிய வசதி கிடைக்காமல் இருக்கும் நிலையில், கட்டணத்தை மேலும் உயர்த்துவது நேரடியாக மக்களை சுரண்டும் செயலாகும். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இல்லையெனில் மக்கள் நலனுக்காக தமிழ்நாட்டில் பரவலான ஜனநாயக போராட்டங்களை நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

Tags : Chennai ,Tamil Nadu ,Congress ,President ,Selva Berundaga ,EU government ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்