- எடப்பாடி
- அஇஅதிமுக
- ஆர்எஸ்எஸ்
- மணிக்கம் தாகூர்
- விருதுநகர்
- விருதுநகர் கலெக்டர்
- ராகுல் காந்தி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- பீகார்
- மத்திய அமைச்சர்
- எல்.முருகன்
- எம்.ஜி.ஆர்
- ஜெயலலிதா
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் எம்பி மாணிக்கம் தாகூர் நேற்று நிருபர்களுக்குஅளித்த பேட்டி: ராகுல்காந்தி வாக்குத் திருட்டு குறித்து பீகாரில் மேற்கொண்டுள்ள பிரசாரத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றி. ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கூற்றின்படி, எம்ஜிஆர் துவக்கி, ஜெயலலிதா வழிநடத்திய அதிமுகவை தற்போது ஆர்எஸ்எஸ் துணை அமைப்பாக எடப்பாடி மாற்றிவிட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது. அதிமுக அமித்ஷா அதிமுகவாக மாறியிருப்பதை பார்த்து கட்சியினர் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம். இரட்டை இலை அவர்கள் கையில் இருக்கலாம். மொத்த கட்சியும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் கொண்டு சென்று விட்டனர். அதிமுகவின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கும் காலம் வெகு விரைவில் வரும். இவ்வாறு கூறினார்.
