×

என் கூட்டத்துக்கும், உன் கூட்டத்துக்கும் ஜோடி போடுவோமா? அணில் ஏன் அங்கிள்னு கத்துது…? ஜங்கிள் ஜங்கிள்னுதானே கத்தணும்: விஜய்யை சீமான் செம கலாய்

மதுரை: அணில் ஏன் அங்கிள் அங்கிள் என கத்துகிறது? அது ஜங்கிள் ஜங்கிள் என்று தானே கத்த வேண்டும் என விஜய்யை விமர்சித்து சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை ஆனையூரில் தமிழர் கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்ட சீமான், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: தவெக மாநாட்டில் பவுன்சர்கள் கடுமையாக நடந்து கொண்டது, இவ்வளவு பாதுகாப்போடு விஜய் வருவது குறித்து நான் பேச வரவில்லை. நான் ஒரு பெரிய கூட்டத்தோடு வருவதில்லை. நீங்கள் யாரைப் பாதுகாக்க அரசியலுக்கு வந்துள்ளீர்கள்? வேற ஏதாவது நாட்டிற்கு செல்கிறீர்களா? ஓட்டு கேட்கும்போது இப்படி பாதுகாப்புடன் வர முடியாது. ஆரத்தி தட்டுடன் வரும் என் பாட்டியை தடுக்க முடியாதே? பதவிக்கு வந்து விட்டால் பாதுகாப்பு தேவைப்படுகிறது.

தவெகவால் நாதகவிற்கு ஒரு ஓட்டு கூட விழுகாது என்பதல்ல. நானே உழுது விதைத்து நல்ல நெல்மணிகளை அறுவடை செய்து வருகிறேன். பிப்ரவரி 7ம் தேதி நான் திருச்சியில் ஒரு மாநாட்டை நடத்துகிறேன். யார் கூட்டம் பெரியது எனப் பார்ப்போம். அன்றைக்கு மாநாடு எப்படி நடத்த வேண்டும் என இந்திய நிலத்திற்கு ஒரு படிப்பினையை கொடுக்க இருக்கிறேன். ஒரு மாநாட்டில் எப்படி உரை நிகழ்த்த வேண்டும் என அந்த மாநாட்டை நடத்திக் காட்டுவேன். தேர்தல் நெருங்குவதால் விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லி இருக்கலாம். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Seeman ,Vijay ,Madurai ,Tamil Party ,Anaiyur, Madurai ,
× RELATED முதல்வர் மாற்றம் விவகாரம்; நானும்...