×

முத்துப்பேட்டை தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம்

முத்துப்பேட்டை,ஆக.27: முத்துப்பேட்டை அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் பேரூராட்சி தலைவர் தொடங்கிவைத்தார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பெரியகடை தெருவில் உள்ள ஆவணா நேனா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் துவக்க விழா காலை நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றியழகன் தலைமை வகித்தார் வட்டார வேளாண்மை குழு தலைவர் இரா.மனோகரன், பள்ளி நிர்வாகி சேக் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார கல்வி அலுவலர் வித்யா வரவேற்று பேசினார். காலை உணவு திட்டத்தை பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் துவக்கி வைத்தார். இதில், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஆறுமுக சிவகுமார், சத்துணவு திட்ட மேலாளர் சித்திரா, சமுதாய அமைப்பாளர் வித்யா, பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் சிவ.ஐயப்பன், அபூபக்கர் சித்திக் தமிழழகன், பாலசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் அகமது இப்ராஹீம், பள்ளி தலைமை ஆசிரியர் கருணாநிதி, ஆசிரியர்கள் முருகேசன், சித்திக், சித்திரகலா மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் காலை உணவு திட்ட பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

 

Tags : Muthupettai Primary School ,Muthupettai ,Muthupettai Government Aided Primary School ,Town ,Panchayat ,Tamil ,Nadu ,Chief Minister ,Avana Nena Government Aided Primary School ,Periyakadai Street ,Muthupettai, Tiruvarur district… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா