- உலக பேட்மிண்டன்
- சிந்து
- பாரிஸ்
- பி.வி. சிந்து
- உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்
- பிரான்ஸ்
- PWF உலக பூப்பந்து சாம்பியன்ஷிப்ப
- பிரஞ்சு
பாரிஸ்: பிரான்சில் நடந்து வரும் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, நேர் செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிடபிள்யுஎப் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் பிரிவு ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து (30), பல்கேரியா வீராங்கனை கலோயனா நல்பன்டோவா (19) உடன் மோதினார்.
துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடிய சிந்து, முதல் செட்டில் சிறப்பாக ஆடி 23-21 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும், சிந்துவின் ஆதிக்கமே காணப்பட்டது. அநாயாசமாக ஆடிய அவர், அந்த செட்டை, 21-6 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற சிந்து, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
* ஆடவர் முதல் சுற்று விறுவிறு போட்டியில் வீழ்த்திய பிரன்னாய்
உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நேற்று இந்திய வீரர் எச்.எஸ்.பிரன்னாய் (33), ஃபின்லாந்து வீரர் ஜோகிம் ஓல்டார்ப் (22) மோதினர். முதல் செட் இழுபறியாக இருந்தபோதிலும், அந்த செட்டை, 21-18 என்ற புள்ளிக் கணக்கில் பிரன்னாய் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய பிரன்னாய், அதையும், 21-15 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர், 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
