×

விநாயகர் சதுர்த்தி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): பிரணவ பொருளாக திகழ்ந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமானின் திருவருளால், அனைவருக்கும் அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வு கிடைக்கப்பெற வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்): அனைவர் வாழ்விலும் துன்பம் நீங்கி இன்பம் பொங்கட்டும். சங்கடம் நீங்கி சந்தோஷம் பெருகட்டும். மாற்றத்தின் மூலம் ஏற்றம் உண்டாகட்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): தீயவை அழிய, வினை களைய வாழ்வில் முன்னேற நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
டிடிவி தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): அனைத்து மக்களின் சோதனைகளும், துன்பங்களும், துயரங்களும் அடியோடு நீங்கி நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டுகிறேன்.

Tags : Vinayaka Chaturthi ,Chennai ,Edappadi Palaniswami ,AIADMK ,General ,Lord ,Vinayaka ,
× RELATED முதல்வர் மாற்றம் விவகாரம்; நானும்...