×

திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழா அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு: கேரள முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பார்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலம், பம்பையில் வரும் செப்டம்பர் 20ம் தேதி நடைபெறவுள்ள திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவளவிழா நிகழ்ச்சியான “லோக அய்யப்ப சங்கமம்” நிகழ்வில் கலந்து கொள்ள கேட்டு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், கேரள மாநில துறைமுகம், தேவசம், கூட்டுறவுத் துறை அமைச்சர் வி.என்.வாசவன் மூலமாக தமிழ்நாடு முதல்வர் கடிதம் வாயிலாக கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தார்.

முதல்வர், கேரள மாநில முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முன்னரே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழாவில் நான் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது. விழாவில், தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பார்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Travancore Devaswom Board Coral Festival ,Ministers ,Sekarbabu ,Palanivel Thiagarajan ,Chief Minister ,M.K. Stalin ,Kerala ,Chennai ,Tamil Nadu ,Pinarayi Vijayan ,Coral Festival ,Travancore Devaswom Board ,Tamil ,Nadu ,Kerala… ,
× RELATED முதல்வர் மாற்றம் விவகாரம்; நானும்...