×

ஆசிய கோப்பையில் பாக்.கை இந்தியா வீழ்த்தும்: வாசிம் அக்ரம் கணிப்பு

லாகூர்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் வரும் 14ம் தேதி இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அளித்துள்ள பேட்டி: சமீபத்திய போட்டிகளில் இந்திய அணி சிறப்பான ஃபார்மில் உள்ளது. அதனால், அவர்களே இந்தப் போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள அணியாகத் தொடங்குவார்கள். ஆனால், இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளைப் பொறுத்தவரை, அந்த குறிப்பிட்ட நாளில், எந்த அணி மன அழுத்தத்தைச் சிறப்பாகக் கையாளுகிறதோ, அந்த அணியே வெற்றி பெறும்.

மேலும் தனிப்பட்ட முறையில், பாபர் அசாம் அணியில் இருப்பதைப் பார்க்க விரும்பினேன். ஆனால் அவர் தேர்வு செய்யப்படாததால், அணியில் உள்ள மற்ற வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும்.  இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட்டில் மோதி ரொம்ப காலம் ஆகிவிட்டது. அது மீண்டும் நடந்தால், இரு நாட்டு ரசிகர்களுக்கும் அது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Bagh ,Asian Cup ,India ,Wasim Akram ,Lahore ,Indian ,Pakistan ,Dubai ,
× RELATED டி20 உலக கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ்...