×

பெண்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் முதல்வர் செய்யாறு எம்எல்ஏ பேச்சு

செய்யாறு, ஆக.22: செய்யாறு அருகே நடந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ ஒ.ஜோதி வழங்கினார். செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஒன்றியம் சித்தாத்தூர், கீழாநெல்லி, பில்லாந்தாங்கல், சோழவரம் கிராமங்களை உள்ளடக்கிய உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் சித்தாத்தூர் கிராமத்திலும், செய்யாறு ஊராட்சி ஒன்றியம் மதுரை, பாராசூர், கழனிபாக்கம், நாவல் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சிறப்பு முகாம் பாராசூர் கிராமத்திலும் நேற்று நடந்தது. சப்- கலெக்டர் அம்பிகா ஜெயின் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் தமிழ்மணி, அசோக்குமார், பிடிஓக்கள் குப்புசாமி, இந்திராணி, சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் சங்கர், சீனிவாசன், ஞானவேல், ராஜ்குமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் டி.ராஜி, திலகவதி ராஜ்குமார், மாவட்ட அயலக அணி துணைத்தலைவர் எம்.கே.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ ஒ.ஜோதி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, அவர் பேசுகையில், இன்றைக்கு பெண்களுக்காக பெண்களுடைய வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவித்தொகை என்று கூட சொல்லாமல் உரிமைத்தொகை எனக்கூறி மாதந்தோறும் தமிழகத்தில் ஒரு கோடியே 15 லட்சம் அட்டைதாரர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கின்ற இந்த அரசுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என்றார். முன்னதாக, சித்தாத்தூர் கிராமத்தில் தலா ரூ.15 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 மேனிலை நீர்தேக்க தொட்டி மற்றும் ரூ.14.55 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை எம்எல்ஏ ஒ.ஜோதி திறந்து வைத்தார்.

Tags : Chief Minister ,Cheyyar ,MLA ,O. Jyothi ,Stalin ,Sidthathur ,Keezhanelli ,Billanthangal ,Cholavaram ,Vembakkam ,Sidthathur… ,
× RELATED ஊர்நாட்டாண்மை கொலை தலைமறைவான 2 பேர்...