×

ரமணர் ஆஸ்ரமம் மகா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, ஆக.21: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமண மகரிஷி ஆஸ்ரமம் மகா கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது புகழ்மிக்க ரமணர் ஆஸ்ரமம். பகவான் ரமண மகரிஷி மதுரை மாவட்டம் திருச்சுழியில் அவதரித்தவர். அண்ணாமலையார் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அதனால், இளம் வயதில் திருவண்ணாமலைக்கு வந்த ரமணர், இங்குள்ள தீபமலை விருபாட்சி குகை மற்றும் அண்ணாமலையார் கோயில் பாதாள லிங்க சன்னதி ஆகிய இடங்களில் கடும் தவமிருந்து ஞானம் பெற்றார். திருவண்ணாமலை அண்ணாமலை உள்ளீடற்ற உன்னத மலை என உலகுக்கு உணர்த்தினார். கடந்த 1950ம் ஆண்டு திருவண்ணாமலையில் அவர் முக்தி அடைந்தார்.

இந்நிலையில், திருவுண்ணாமலையில் அமைந்துள்ள பகவான் ரமணர் ஆஸ்ரம மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. அதையொட்டி, கடந்த 18ம் தேதி விக்னேஷவர பூஜையுடன் விழா தொடங்கியது. அன்று முதல் கால யாக பூஜையும், 19ம் தேதி இரண்டாம் காலம் மற்றும் மூன்றாம் காலம் யாகசாலை பூஜையும் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை நான்காம் கால பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. பின்னர், காலை 10.15 மணியளவில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. அப்போது, யோகாம்பாள் சமேத மாத்ருபூதேஸ்வரர் சன்னதி மற்றும் ரமணேஸ்வர மகாலிங்க சன்னதி கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, கடந்த 19ம் தேதி நடந்த மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜையில், இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு வழிபட்டார்.

Tags : Ramana Ashram Maha Kumbabhishekam ,Tiruvannamalai ,Ramana ,Kumbabhishekam ,Giriwala Path ,Ramana Ashram ,Bhagwan Ramana Maharishi ,Tiruchi, Madurai district ,Annamalaiyar… ,
× RELATED செய்யாறு பஸ் ஸ்டாண்டில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது