×

ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மிரட்டல் எடப்பாடி அநாகரிகமான செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: அவசரகால 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை எடப்பாடி பழனிசாமி மிரட்டி உள்ளார். இதுபோன்ற அநாகரிகமான செயலை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஆம்புலன்ஸ் டிரைவரை மிரட்டும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி தந்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் நடந்து வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஜூலை 15ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் “உங்களுடன் ஸ்டாலின்“ எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பொறுத்தவரை நகர்ப்புற பகுதிகளில் 3,768 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 6,232 முகாம்களும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னைக்கு இரண்டாம் கட்டம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் முகாம்களின் எண்ணிக்கை 148. சைதாப்பேட்டை 142வது வட்டத்தில் ஒரு முகாம் தொடங்கப்பட்டது. மொத்தம் இரண்டாம் கட்டமாக 2,859 முகாம்கள் நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து மூன்றாம் கட்டமாக 2,773 முகாம்கள் நடைபெற இருக்கிறது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதிலும் 10,000 முகாம்கள் நடைபெற இருக்கிறது. எடப்பாடி எங்கு சென்றாலும் அங்கு ஆம்புலன்ஸ் வருவதாக சொல்றாங்க. அவர் பெரும்பகுதி ஆதரவு திரட்டுவதற்கு பிரதான சாலையில்தான் செல்கிறார். தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் 1330 என்கின்ற எண்ணிக்கையில் இருக்கிறது. 1330 ஆம்புலன்ஸ்களும் உயிர்காக்கும் சேவையை செய்துக் கொண்டிருக்கிறது. எங்கேயாவது விபத்து ஏற்பட்டால் 8 முதல் 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் விரைந்து சென்று உயிர்களை காக்க வேண்டும். இன்று உலகத்திலேயே 108 ஆம்புலன்ஸ் சேவை போல வேறு எங்கும் சேவை இல்லை என்று அனைவருமே பாராட்டுகிறார்கள். உடனடியாக உயிர் காப்பாற்றப்பட்டு வருகிறது. இவர் ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை கூட்டி நான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் விடுவதாக சொல்லி இருக்கிறார்.

தமிழில் இதற்கு பழமொழி உண்டு, “அரண்டவன் கண்ணுக்கு மிரண்டதெல்லாம் பேய்” என்றெல்லாம் சொல்வார்கள். இந்த ஆம்புலன்ஸ் பார்க்கும்போது அவருக்கு வேறு ஏதோ ஞாபகம் வருகிறது என்று நினைக்கின்றேன். இது தவறான விஷயம். அதுவும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பெயரை நோட் பண்ணு என்றெல்லாம் சொல்கிறார். இது மருத்துவத்துறையில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்களை மிரட்டும் தொனி. ஒரு முன்னாள் முதல்வர், மிரட்டுகின்ற தொனியில் பேசுவது என்பது அநாகரிகமாக செயல். அவர் இத்துடன் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் மத்தியில் அவருக்கு இன்னும் கூடுதல் எதிர்ப்பை இது ஏற்படுத்தி தரும். இவ்வாறு அவர் கூறினார். தமிழில் இதற்கு பழமொழி உண்டு, “அரண்டவன் கண்ணுக்கு மிரண்டதெல்லாம் பேய்” என்றெல்லாம் சொல்வார்கள். இந்த ஆம்புலன்ஸ் பார்க்கும்போது அவருக்கு வேறு ஏதோ ஞாபகம் வருகிறது என்று நினைக்கின்றேன்.

Tags : Minister ,M. Subramanian ,Edappadi Palaniswami ,Chennai ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...