- துணை ஜனாதிபதி தேர்தல்
- இந்தியா
- கமல்ஹாசன் எம். பி.
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்திய துணைத் தலைவர் தேர்தல்
- கமல்ஹாசன்
- மக்கள் நீதி மாயம் கட்சி
- கமல்ஹாசன்
- தில்லி
சென்னை: இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழ்நாட்டை மனதில் கொண்டிருப்பவர் யார் என்பதை தெரிந்து தேர்ந்தெடுக்க வேண்டும், என்று கமல்ஹாசன் எம்பி தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்பி, நேற்று மாலை டெல்லியில் இருந்து, ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம், சென்னை வந்தார். அப்போது கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி; நான் தமிழ்நாட்டில் இருந்து தலைநகர் டெல்லிக்கு சென்றது, தமிழர்களுக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை, கொண்டு வருவதற்கும், தமிழர்களுக்கு பயன்கள் கிடைக்கவில்லை என்றால், ஏன் கிடைக்கவில்லை என்று கேட்பதற்கும் தான் சென்றிருக்கிறேன்.
எனக்கு என்னுடைய நாடும் முக்கியம், தமிழ்நாடும் முக்கியம். இதில் தமிழ்நாட்டையும் மனதில் கொண்டு இருப்பவர்கள் யார் என்பதை தெரிந்துதான், தேர்ந்தெடுக்க வேண்டும். எங்களுடைய கூட்டணியில் பல ஆளுமைகள் இருக்கின்றன. அதில் எனக்கு நெருக்கமானவரும், தமிழர்களுக்கு நெருக்கமானவருமான ஆளுமை என்று பார்த்தால், அது தமிழக முதல்வர் தான். அவர் இந்த கூட்டணியில் உள்ளார். அவர் எங்கள் கூட்டாளி. அவரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு, இதற்கான பதிலை சொல்வது தான் நியாயமாக இருக்கும். சி.பி.ராதாகிருஷ்ணன் என்பது பெயர்கள். நாங்கள் சொல்லுவது தேர்தல். இவ்வாறு அவர் கூறினார்.
