சேலம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாடு கடந்த 15ம் தேதி சேலத்தில் தொடங்கியது. கடைசி நாளான நேற்று செம்படை பேரணி நடந்தது. சேலம் பிரபாத் பகுதியில் இருந்து புறப்பட்ட பேரணி, நேரு கலையரங்கம் வழியாக போஸ் மைதானத்தை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர் பொதுக்கூட்டம் நடந்தது. இம்மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் மாநில குழு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஒருவாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
