திண்டிவனம், ஆக.19: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கிடங்கல்-1 பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் சபரிநாதன் திண்டிவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை சபரிநாதன் கடைக்கு சைக்கிளில் சென்றபோது பக்கத்து வீட்டில் முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன் என்பவர் வளர்த்து வந்த நாட்டு நாய் வீட்டிலிருந்து வெளியில் அழைத்து வந்தபோது திடீரென சிறுவன் மீது பாய்ந்து கை மற்றும் கால்களில் கடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அவனது பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ச்சியாக நாய்கள் கடித்து அதிக அளவில் பொதுமக்கள் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் தற்போது திண்டிவனத்தில் நாட்டு நாய் கடித்து சிறுவன் படுகாயம் அடைந்த சம்பவம் சமூக வலைதளத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
